search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாத தாக்குதல்"

    • ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.
    • தலிபான்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. தலிபான்கள் கடந்த ஆண்டு அங்கு ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு ஆண்டு முடிந்துள்ளது.

    இந்நிலையில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில், பாகிஸ்தானில் 51 சதவீதம் அளவுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தானில் ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 14, 2021 வரை நடத்தப்பட்ட 165 தாக்குதல்களில் 294 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 598 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    ஆனால், ஆகஸ்ட் 15, 2021 மற்றும் ஆகஸ்ட் 14, 2022 க்கு இடையில் நடந்த 250 தாக்குதல்களில் 433 பேர் கொல்லப்பட்டனர். 719 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்
    • நீதிபதி மறைவுக்கு பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் நேற்று பலுசிஸ்தான் மாகாணத்தின் கரண் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென அவரை நோக்கி சூப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த நீதிபதியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

    நீதிபதி மறைவுக்கு பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளா. மேலும் நீதிபதியின் சேவை மறக்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் தேசத்தை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

    ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை மெஸ்கன்சாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளது.
    • காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி பதிலளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்துள்ளன.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டு 417 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. இது கடந்த 2019-ல் 255 ஆகவும், 2020-ல் 244 ஆகவும், 2021-ல் 229 ஆகவும் குறைந்துள்ளன.

    கடந்த 2018-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 80 ஆகவும், 2020-ல் 62 ஆகவும், 2021-ல் 42 ஆகவும் குறைந்துள்ளது.

    2018-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 39 ஆகவும், 2020-ல் 37 ஆகவும், 2021-ல் 41 ஆகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம் தேஹங் அருகே, அசாம் ரைபிள் படையினர்  சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அசாம் ரைபிள் படையின் கட்டளை அதிகாரி விப்லவ் திரிபாதி, அவரது மனைவி, 8 வயது மகன் மற்றும் 4 வீரர்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் மணிப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

    அசாம் ரைபிள் படையினர் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
    ×